கேரளத்தில் பூம்பட்டா (வண்ணத்துப் பூச்சி) என்ற சிறுவர் இதழை வெற்றிகரமாக நடத்தி வந்த திரு. எஸ்.வி. பை அவர்கள் தமிழகச் சிறுவர்களை மகிழ்விக்க தமிழில் ஒரு சிறுவர் இதழை வெளியிட ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கான விளம்பரங்கள் 1982லேயே வெளியிடப்பட்டன. பல்வேறு காரணங்களால் திரு.பை அவர்களின் கனவு இரண்டு வருடங்கள் வரை நிறைவேறவேயில்லை.
1984ல் திரு.பை அவர்களின் கனவு நனவாயிற்று! அவரது கனவை நனவாக்கியவர் வேறு யாருமல்ல... நமது தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பிதாமகன் திரு.
வாண்டுமாமா அவர்களேதான்!
எண்பதுகளில் கல்கி, இதயம் பேசுகிறது, கதிர், குங்குமம் போன்ற இதழ்களில் பணியாற்றி வந்தார் வாண்டுமாமா. சில நிறுவனங்களில் அவர் சந்தித்த கசப்பான அனுபவங்கள், குறைவான ஊதியம் போன்றவை அவரை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையில் பணியாற்ற விடவில்லை.
நல்லதொரு சிறுவர் இதழை வெளியிட வேண்டும் என்ற திரு. பையின் ஆர்வமும், நல்லதொரு நிறுவனத்தால் வெளியிடப்படும் சிறுவர் இதழில் பணியாற்ற வேண்டும் என்ற
வாண்டுமாமாவின் தேடலும் ஒரு புள்ளில் முடிந்த நாள் தான் 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள். தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பொன்னாள்!
கோலாகலமாக நடந்த வெளியீட்டு விழாவில் அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. மோகன் அவர்களால் வெளியிடப்பட்ட முதல் பூந்தளிரை அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் அமுதசுரபியின் ஆசிரியருமான திரு. விக்கிரமன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடக்கத்தில் பூந்தளிரில் பூம்பட்டாவின் தமிழாக்க படைப்புகளும், டிங்கிள் பத்திரிக்கையின் காமிக்ஸ் ஸ்டிரிப்புகளும் வெளிவந்தன. ஆறு மாதங்களுக்கு பின்னர் வாண்டுமாமா தமிழ் இலக்கியம் சார்ந்த கதைகள், அறிவியல், பொது அறிவு, வேடிக்கை விளையாட்டுகள் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூம்பட்டா படைப்புகளை வெகுவாக குறைத்து விட்டார்.

வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்புகளும் வசதிகளும் சுதந்திரமும் பூந்தளிரில் வாண்டுமாவிற்கு திரு. பை அவர்களால் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை வரமாக பயன்படுத்தி வாண்டுமாமா பூந்தளிரை அற்புதமானதொரு சிறுவர் பத்திரிக்கையாக மெருகேற்றினார்.
பூந்தளிருடன் நமது இதிகாச, வரலாற்று கதைகளை காமிக்ஸ் வடிவில் வெளியிட்ட பூந்தளிர் அமர் சித்திரக்கதையும் வெளிவந்தது. ஆனால் பூந்தளிரை போல விற்பனையில் அது சாதனை படைக்கவில்லை. ஆனாலும் பூந்தளிர் நிற்கும் வரை அமர் சித்திரக்கதையும் வெளிவந்தது. நான் கூட 1986ல் இருந்த பூந்தளிர் வாங்கினாலும் பூந்தளிர் அமர் சித்திரக் கதையை வாங்கவில்லை. அதன் மதிப்பறிந்து பழைய புத்தகக் கடைகளில் தான் அவற்றை சேகரித்தேன்.
காமிக்ஸ் பூக்களில் முன்னரே
பூந்தளிரைப் பற்றிய ஒரு விரிவான பதிவு வெளியிடப்பட்ட நிலையில் முதல் இதழின் சிற்சில பக்கங்களை படிப்பதை விட பார்ப்பதே சிறப்பு என்பது என் கருத்து!
முதல் இதழின் எடிட்டோரியல் உங்கள் பார்வைக்கு! இதழின் லோகோவிற்கு கொடுக்கப்ட்ட முக்கியத்துவத்தை காணுங்கள். பூந்தளிர் வாசகர்களால் மறக்கவியலாத லோகோ இது!
முதல் இதழின் உள்ளடக்கத்தை பார்த்தாலே பூந்தளிர் தமிழ் சிறுவர்களை கவர்ந்த ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
கபீஷ், காக்கை காளி உள்ளிட்ட 5 காமிக்ஸ் கதைகள் முதல் இதழில் வெளிவந்தன. முதல் இதழில் காக்கை காளியின் பெயர் 'காக்கா காளி'தான்.
முதல் இதழில் வெளிவந்த கபீஷ் கதை கபீஷ் விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கதை. இதன் மூலம் வேண்டியபோது நீளமாகும் வாலை கபீஷ் எவ்வாறு பெற்றான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவற்றுடன் ‘ஆகாயப்பயணம் ஆரம்பம்’, ‘அணிலை சந்தியுங்கள்’ ஆகிய காமிக்ஸ் வடிவ அறிவியல் உண்மைகளை கூறும் இரண்டு படைப்புகளும் வெளிவந்தன.
வாண்டுமாமா கிரேக்க புராணக் கதைகளை ‘கடவுளர்களின் கதை’யுடன் தொடங்கினார். கே. இராதாகிருஷ்ணன் அவர்களின் ‘வீரன் விஜயவர்மன்’ என்ற தொடர்கதை முதல் இதழிலேயே வெளிவரத் தொடங்கியது. இவற்றுடன் 6 சிறுகதைகள் வெளிவந்தன.
அட்டையுடன் சேர்த்து மொத்தம் 84 பக்கங்கள் உள்ள பூந்தளிர் 8 முழுப்பக்க விளம்பரங்களை கொண்டிருந்தது. அவற்றில் 7 பைகோவின் சொந்த நிறுவன விளம்பரங்கள். சிரிப்புத் துணுக்குகளை ஓவியர் விசுவும், கதைகளுக்கான படங்களை ஓவியர்
செல்லம், கல்பனா, உமாபதி போன்றோரும் வரைந்திருந்னர்.
நன்றி: முதல் இதழை கொடுத்து உதவிய நண்பர் கிங் விஸ்வாவிற்கும் தனது வாழ்க்கை வரலாறான 'எதிர்நீச்சலில்' தனது பூந்தளிர் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாண்டுமாமாவிற்கும் எனது நன்றிகள்.
மீ த ஃபர்ஸ்ட்டு!
பதிலளிநீக்குஅனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
காக்கா காளி என்பது இன்வெறியை தூண்டும் கதை அல்லவா தல..,
பதிலளிநீக்குசாரி செவன் இந்த நாள் உலகம் முழுவதும் விஸ்வா தினமாக கொண்டாடப் படுகிறது தெரிந்து கொள்ளுங்கள்
பதிலளிநீக்குசிறப்பான பதிவளித்த ஐயம் சாருக்கு கோடானுகோடி நன்றிகள் உரித்தாகுக.
பதிலளிநீக்குநண்பரே,
பதிலளிநீக்குஉங்களிற்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு.
அருமையான பதிவு. சிறப்பான தகவல்கள். அனைத்திற்கும் நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான ஸ்கான்கள் பதிவிற்கு அழகு சேர்க்கின்றன.
படங்கள் பெரிதாக மறுக்கின்றன. கவனிக்கவும்.
பதிலளிநீக்குஇதுதான் கபீஷின் முதல் கதை அல்லவா? ஆனால் முத்து காமிக்ஸ் வைரஸ் எக்ஸ் கதையில் இது ஏற்கனவே தமிழில் வந்துள்ளது அல்லவா?
பதிலளிநீக்குரொம்ப சந்தோஷமா இருந்திங்க
பதிலளிநீக்குஅந்த நாட்களுக்குள் சென்ற வந்தது போல.
இதை பாதுகாத்து வைத்திருந்த அவருக்கும் நன்றிகள்
//15 ஏப்ரல், 2010 1:31 pm
பதிலளிநீக்குபுலா சுலாகி சொன்னது…
இதுதான் கபீஷின் முதல் கதை அல்லவா? ஆனால் முத்து காமிக்ஸ் வைரஸ் எக்ஸ் கதையில் இது ஏற்கனவே தமிழில் வந்துள்ளது அல்லவா?//
ஆமாம் நண்பரே.
கிடைப்பதற்கு அரிய ஒரு புத்தகத்தின் பக்கங்களை பார்க்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி. கூடுதலாக தந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை. முதல் இதழில் வாண்டுமாமாவின் படக்கதையே இல்லையா?
பதிலளிநீக்குபூந்தளிரில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி அறிவியல் கட்டுரைகளே ஆகும்
முதல் இதழில் அறிவியல் கட்டுரைகள் அவ்வளவாக இல்லை போலிருக்கிறது
உங்களுக்கும் பிந்தய புத்தாண்டு வாழ்த்துக்கள நண்பரே. பதிவிற்கு நன்றி. முதலாவது புத்தகத்தைப் பார்க்கும் பாக்கியம் பெறச் செய்தமைக்கு நன்றி :)
பதிலளிநீக்குநண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த இடுகை என்னை ஐந்தாம் வகுப்பு `இ` பிரிவில் அமர வைத்து விட்டது.
பதிலளிநீக்கு:)
அருமை
பதிலளிநீக்குசூப்பர் அப்பு
பதிலளிநீக்குஸ்டார்ட் மியூசிக்................................................................................................
பதிலளிநீக்குசிறப்பான பதிவு. பூந்தளிர் அற்புதமான அறிவு மற்றும் பொழுது போக்கு பெட்டகம். தமிழில் இதை போல் இன்னொரு புத்தகம் வரவே இல்லை.
பதிலளிநீக்குநன்றி.
யானைக்குட்டியின் பெயர் பந்திலை என்றும் பந்திலா என்றும் மாறி மாறி வருவத கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா.
பதிலளிநீக்குஎன்னை அப்படியே குழந்தை உலகத்திற்கு கொண்டு சென்று விட்டது, எங்களுடையது கிராமமாக இருந்தாலும் பூந்தளிரின் வீச்சு (Reach) மிக நீண்டது,
பதிலளிநீக்குஅப்படியே வாண்டு மாமா அவர்கள் வெளியிட்ட "பார்வதி சித்திர கதைகள்" பலே பாலு, ஓநாய் கோட்டை, போன்ற வைகளை பற்றியும் வெளியிடலாமே
In 1978, there were two children's magazines named "ANIL" and "Muyal". In Anil I read One serial "Mudalai Theevu" bu PU VI Vendan and In Muyal I read "Iratham Kuddikkum Manidarkal". Can anybody give me more details.
பதிலளிநீக்குThanks,
மிஸ்டர் பெயரில்லா,
பதிலளிநீக்கு//In 1978, there were two children's magazines named "ANIL" and "Muyal". In Anil I read One serial "Mudalai Theevu" bu PU VI Vendan and In Muyal I read "Iratham Kuddikkum Manidarkal". Can anybody give me more details.//
That is Not PU VI Vendhan, rather it is Puvi Vendhan Who was fondly called as Anil Anna.
இந்த மாதிரி எல்லாம் மெயில் ஐடி கொடுக்காம இருந்தா, யாராலும் ஹெல்ப் பண்ண முடியாது.
இருந்தாலும் கூட என்னிடம் அந்த புத்தகங்கள் உள்ளன. ஐயம் சாரை அடுத்தபடியாக அந்த புத்தகங்களையே பதிவிட சொல்லிவிட்டால் போயிற்று.
அணில் பற்றி ஒரு தனி கட்டுரையே எழுதும் அளவிற்கு தகவல்கள் உள்ளது. முதன் முதலில் அணில் ஆரம்பிக்கப்பட்டது அறுபதுகளில். அப்போது அதன் ஆசிரியர் யார் என்று தெரியுமா? Hold your Horses, அமரர் திரு தமிழ்வாணன் அவர்கள் தான். பின்னர் சில பல காரணங்களால் அது மூடப்பட்டது. எழுபதுகளில் மறுபடியும் சென்னையில் இருந்து புவி வேந்தன் அவர்களால் நடத்தப்பட்டது. மறுபடியும் மூடப்பட்டது.
கடைசியாக எண்பதுகளின் மத்திம நேரத்தில் புதுச்சேரியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது, இப்போதும் புவி வேந்தன் தான் ஆசிரியர். காமிக்ஸ் வடிவத்திலும் வந்ததுதான் இந்த இதழின் ஹை லைட். Inspector Vikram கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தன. சாகாவரம் பெற்ற வீரப்பிரதாபன் தான் எழுத்துக் கதையின் ஹீரோ. பெரிய மனுஷன் என்ற கட்டை விரல் நீள மனிதன் தான் அவருடைய சகா. இப்படியாக ஒரு அற்புதமான தொடர் இந்த அணில்.
mr.r.s.k. said, ''anil'' - idhalin mudhal veliyidu ''paranthu thakum pambu''. 1960'-kalil veliyana 1st ithalin vilai 60 paise only.
பதிலளிநீக்குayya nanum ungalai madiridan comics rasigan romba sandoshamairuku
பதிலளிநீக்குஅன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.
பதிலளிநீக்குநிர்வாக குழு,
தகவல் வலைப்பூக்கள்.....
http://thakaval.net/blogs/comics/
Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..
பதிலளிநீக்குசிறை மீட்டிய சித்திரக் கதை.......
http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html
kindly delete this comment after reading...
அய்யோ!! ‘பூந்தளிரி’ன் பழைய நினைவுகள் அத்தனையும் இப்படி கிண்டி விட்டீர்களே. நான் சிரமப்பட்டு சேர்த்து வைத்த இதழ்கள் அனைத்தும், ஒரு முறை வீடு மாறும் போது தொலைந்து போயின. மிஸ்ஸிங் யூ ‘பூந்தளிர்’... :(
பதிலளிநீக்குFrom The Desk Of Rebel Ravi:
பதிலளிநீக்குsir,
poonthalir is my all time favourite magazine. i just loved every page of it.
kindly do more posts on this book.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
நண்பரே,
பதிலளிநீக்குவலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.
http://007intamil.blogspot.com/2010/06/x.html
waaaaw.....flash backs...does anyone remember...rathnabala magazine for kids?
பதிலளிநீக்குevery month my dad used to buy..poonthalir,rathnabala,ambulimama,balamithra,rani comics and some mayajal novels for kids... and gokulam for me.
also in the later 80's that is before the USSR was divided we used to buy soviet magazine...i don't remember the name...may be "soviet kalacharam" or "soviet palkalai" something like that. in that magazine we have informations about soviet culture,their history,their versions of children's stories and cartoons and in the last page russian words and meanings.
if someone know about this magazine,please share your flashbacks.....also is the "rathnbala" magazine still coming?
sorry my post is in english and it is lengthy...
regard,
priya.
பூந்தளிர் கடந்த காலத்தை நினைக்கும்போது மறக்க முடியாமல் நினைவுக்கு வருவது. கடைக்குப்போய் வாங்கி வரும்வழியிலேயே முழுவதும் படித்து முடித்துவிடுவேன் (சைக்கிள் ஓட்டத்தெரியாததன் விளைவு)
பதிலளிநீக்குஆனால் பூந்தளிரைக்காட்டிலும், என்னை மிகவும் கவர்ந்தது ‘துளிர்’ என்னும் அறிவியல் பத்திரிக்கை. இந்தியா டுடே போன்ற Size-ல் வந்தது. இது கடைகளில் கிடைத்ததா என்று தெரியாது, சந்தா மூலமாக என்னை வந்தடைந்தது. ஆழ்கடல் பற்றிய அதிசயங்களை விவரித்த தொடர் மிகவும் அருமையானது. திருக்கை குறித்து நான் படித்த செய்திகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
துளிரின் காரணமாக நான் வெகு விரைவிலேயே படக்கதைகளைவிட்டு வெளிவந்துவிட்டேன் (அண்ணன்களோடு போட்டி). இப்போது நினைக்கையில், ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டேன் என்று தோன்றுகிறது.
My favourite sithirakathai in poonthalir vettaikaran vembu.
பதிலளிநீக்குby,
A.MEEGAANAND
அய்யா,
பதிலளிநீக்குஎல்லாவற்றியும் எழுதி உள்ளீர். எங்கள் வேட்டைகாரன் வேம்பு பற்றி எழுதவில்லை ஏன்?
BY
A.MEEGA ANAND.
சூப்பர்ங்க.. நன்றி. நான் பூந்தளிர் போன்ற பழைய பாலர் இதழ்களை தேடிக்கொண்டிருக்கிறேன். :-) kingviswa வின் ஈமெயில் முகவரி கிடைக்குமா?
பதிலளிநீக்குநன்றி.
விதூஷ்.
உங்கள் வலைப்பு அற்புதமாக இருக்கிறது. இன்று குழந்தைகளுடைய உலகினைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் குறைந்து வருகின்றனர். குழந்தைகளுக்கும் அவர்கள் வயதினையும் கற்கும் ஆற்லையும் மீறிய விஷயங்களைத் திணித்து வருகின்றனர். இந்த நிலையில் உங்களின் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவை என்னுடைய இணையதளத்தின் http://www.kpenneswaran.com “நல்லா இருக்கே” என்னும் பகுதியில் இணைத்து இருக்கிறேன்.
கி.பென்னேஸ்வரன்
சார்,
பதிலளிநீக்கு//இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//
என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.
உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007
அன்புள்ள அருமை நண்பர் அவர்களே!!! மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார்!! தங்களின் பதில் என்ன? என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்
பதிலளிநீக்குhttp://hajatalks.blogspot.com/2010/12/rathna-comics-written-by-haja-ismail.html#comments
பயங்கரவாதி டாக்டர் செவன் said...
மக்களே,
பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!
http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு
தலைவர்,
அ.கொ.தீ.க.
December 24, 2010 2:11 AM
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குமுஸ்தபா, எண்ணூர்.
நன்றி நண்பரே ...
பதிலளிநீக்குஎன்னுள் புதைந்திருந்த பழைய நினைவுகளை தூசு தட்டி விட்டதற்கு ...
காமிக்ஸ் உலகை விட்டு ஆர்வலர்களை விட்டு தொலைந்துபோயிருந்தேன்....
திரு விழாவில் தொலைந்துபோனவன் மீண்டும் பெற்றோரை தேடி அடைந்ததை போன்ற குதூகல வெள்ளத்தில் நான் ...
என் காமிக்ஸ் வாசிப்பு அனுபவங்களை புதுப்பித்துக் கொள்கிறேன் ...
அய்யோ... என்னைப் போலவே உலகில் இவ்வளவு காமிக்ஸ் பைத்தியங்களா ...இவ்வளவு நாளாய் இது தெரியாமல் போயிற்றே ....இவ்வளவு காலம் வீணாக்கிவிட்டேன் ..பரவாயில்லை லேட்டானாலும் லேட்டஸ்ட்டாய் வந்துவிட்டேன் ...கடலில் குதித்துவிட்டேன் ...இனி காமிக்ஸ் முத்தெடுப்புதான்