வெள்ளி, 1 ஜனவரி, 2010

விடுமுறை தின சிறப்புச் செய்தி!

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு விடுமுறைதினத்தை (ஐடியா உதவி: நமது கலைஞர் தொலைக்காட்சி) சிறப்பிக்கும் வகையில் ஒரு முன்னோட்டத்தை காமிக்ஸ் பூக்கள் சிறுவர் இலக்கிய ஆர்வலர்களுக்கு அளிக்கிறது.

பூந்தளிர் அமர்சித்திரகதைகளை நம்மில் பெரும்பான்மையோர் அறிந்திருப்போம். இதற்கு முன்னோடியாக இண்டியா புக் ஹவுஸ் நிறுவனம் அமர சித்ர கதைகள் என்ற பெயரில் ஆங்கில சிறுவர்கதைகள் தமிழில் மொழிபெயர்த்து ஜீன் 1964 முதல் வெளியிட்டது. தற்போதைக்கு அவற்றின் அட்டைப்படங்களை காமிக்ஸ் ஆர்வலர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இது குறித்த பாரிய பதிவு விரைவில்...

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் நமது லயன் குழும இதழ்கள் INFO MAPS STALLல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாசகப் பெருமக்கள் அனைவரும் இந்த வாய்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்!

26 கருத்துகள்:

 1. நெடுநாள் கழித்து வருகை தந்திருக்கும் அய்யம் வெங்கி அவர்களை வரவேற்கிறேன். அமர் சித்திர கதைகளின் தமிழ் ஆக்கங்களின் அட்டைகள் கண்ணை பறிக்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி. முழுமையான பதிவை சீக்கிரம் வெளியிடவும்.

  பதிலளிநீக்கு
 2. அரசியல் கருத்துக்களை அனைத்து தளங்களிலும் அஞ்சாமல் அள்ளி வீசும் அய்யம்பாளயத்தாரே ,

  விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

  அந்த எஸ்.எம்.எஸ் ஜோக் என்னவாயிற்று?

  பதிலளிநீக்கு
 3. வெல்கம் பேக் அய்யம்பாளையத்தாரே,

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  பதிலளிநீக்கு
 4. தலைப்புகளில் விளையாடும் தமிழ் நயத்தை கவனித்தீர்களா? அற்புதம்!

  குறிப்பாக ஆழ்ந்துறங்கும் அழகியும், பனிவதனியும் சூப்பர்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  பதிலளிநீக்கு
 5. மேதகு மதியூகியும், சிறுவர் உலக சிந்தனை சிற்பியுமான திரு அயம்பாளயத்தார் அவர்களே,

  உங்களை வரவேற்பதில் பெறுமகிழ்ச்சி கொள்கிறேன். பதிவினை விரைவில் எதிர்பார்க்கிறேன். மற்ற இரண்டு புத்தகங்கள் உங்களிடம் இல்லையா என்ன?

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

  பதிலளிநீக்கு
 6. //பயங்கரவாதி டாக்டர் செவன் சொன்னது…
  தலைப்புகளில் விளையாடும் தமிழ் நயத்தை கவனித்தீர்களா? அற்புதம்!

  குறிப்பாக ஆழ்ந்துறங்கும் அழகியும், பனிவதனியும் சூப்பர்!//

  இதன் பின்னணியில் பணியாற்றிய சிறுவர் இலக்கியவாதிகளை பற்றி கேள்விப் பட்டால் மகிழ்வில் தலை கால் புரியாமல் குதிப்பீர்கள். ஆம், தமிழ் சிறுவர் இலக்கிய உலகின் பிதாமகன்கள் அனைவரும் இந்த ஆரம்ப கால அமர சித்திர கதைகளின் தமிழாக்கத்தில் பங்காற்றி உள்ளனர்.

  நண்பர் அயமபாளயத்தார் இதனை பதிவிடும்போது விவரமாக தெரிவிப்பார்.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

  பதிலளிநீக்கு
 7. Welcome back !

  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  முழுபதிவை எதிபார்த்துகொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளயத்தாரே,

  இந்த கதைகளை விட கதைகளில் / தமிழாக்கத்தில் பங்கு பெற்ற புகழ் பெற்ற சிறுவர் இலக்கியவாதிகளின் பெயர்களே என்னை மிகவும் கவர்ந்தவை. அதனால் பதிவிடும்போது அவர்களை பற்றியும் சற்று குறிப்பிடுங்கள்.

  மக்களுக்கு அதன்மூலமாவது அவர்களை பற்றி சற்று தெரியட்டும்.

  பதிலளிநீக்கு
 9. thanks a lot, last week i visited bookfair and failed to find out our comics, thank you verymuch, tomorrow after 2oclock comics hunt starts......

  பதிலளிநீக்கு
 10. அருமையான படங்களை மறுபடியும் பார்க்க வைத்தமைக்கு நன்றிகள் பல கோடி.

  காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
  தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 12. தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

  http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

  பதிலளிநீக்கு
 13. காமிக்ஸ் நண்பர்களே,

  வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

  புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

  இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
  காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

  பதிலளிநீக்கு
 14. நண்பர்களே,

  புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.

  நன்றி.

  http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 15. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  பதிலளிநீக்கு
 16. இந்த எல்லாப் புத்தகங்களும் எங்கள் வீட்டில் அந்தக் காலத்தில் இருந்தவையே! இவற்றை எத்தனை முறை படித்திருப்போம், அம்மாவிடம் கதை கேட்டிருப்போம் என்பதற்குக் கணக்கே கிடையாது. மீண்டும் இவற்றைக் கண்முன் கொண்டுவந்த்தற்கு மிக்க நன்றி! முழுப் புத்தகத்தையும் வெளியிடுங்களேன் (அட்டை மட்டும் அல்லாது) ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
 17. ஊரில் மாங்கா சாப்பிட்டவர்30 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:25

  மாங்கா அருமை.

  பதிலளிநீக்கு
 18. அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே
  மிக நல்ல பதிவு
  உங்களின் பதிவை பார்த்ததும் தன ஞாபகம் வருகிறது என்னிடமும் இதே போல தமிழில்
  வந்த ஆனால் டோம் சா யர் மற்றும் ஷேக்ஸ் ப்ய்ர போன்றவர்களை பற்றி இருக்கும் என்று
  நினைவு பத்து அல்லது பதினைந்து புத்தகங்கள் இருப்பதாக ஞாபகம்
  தேடி பார்த்து தகவல் தெரிவிக்கிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  Visit our website for more information http://www.thalaivan.com

  Latest tamil blogs news

  பதிலளிநீக்கு
 20. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!