வார, மாத இதழ்களில் வெளிவரும் 'ஜோக்' குகளில் ஓரிரு வசனங்களுடன் ஒரே சித்திரத்துடன் வருபவை, அடுத்தடுத்த நிகழ்வுகளை தொடர்சித்திரங்களாக வரைந்து வசனங்களுடன் அல்லது வசனங்கள் இல்லாமல் வருபவை ஆகிய இரு பெரும் வகைகளும் அடக்கம். இரண்டாம் வகை காமிக்ஸ் உலகத்தின் முதலடியாகும்.
தமிழகத்தில் ஜோக்குகளை காமிக்ஸ் வடிவத்தில் படைக்கும் முன்னோடிகளில் ஒருவர்தான் சுதர்ஸன். நகைச்சுவை எழுத்தாளரான இவர், அவற்றிற்கு சித்திரங்களை வரையும் திறமை கொண்டவராகவும் இருந்தார். வாரமலர் இதழில் இவரது ஜோக்குகள் புகழ்பெற்றவை. இவரது ஓவியங்கள் கிறுக்கல்கள் போல தோன்றினாலும் பார்ப்பவர்களை யோசிக்காமல் சிரிக்க வைக்கும். வெகுஜன இதழ்களில் மட்டுமன்றி பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களில் கூட இவரது ஜோக்குகள் வெளிவந்திருக்கின்றன.
சமீபத்தில் சுதர்ஸன் அவர்கள் காலமானார். அவரைப் பற்றி தினமலர் / வாரமலர் இதழில் வெளிவந்த செய்தியையும், பூந்தளிரில் வெளிவந்த சுதர்ஸன் அவர்களின் ஜோக்குகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் அண்ணாரது இழப்பிற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு சுதர்சன் அவர்களின் மறைவுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் இரங்கல் தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் மனவலிமையைய்ம் எல்லாம் வல்ல அந்த இறைவன் அளிக்க வேண்டிக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குஇவரது பாணி ஓவியங்கள் தனி அழகு. சீரிய நேர்க்கோட்டில் அதிக சிரமமில்லாமல் முக பாவனைகளை நகைச்சுவையோடு அளிக்கும் பாங்கினை இனி எங்கு காண்போம்?
தமிழ் காமிக்ஸ் உலகிற்கும் பத்திரிகை உலகிற்கும் ஒரு பெருத்த இழப்பு.
பதிலளிநீக்குசுதர்சன் அவர்களின் மகள் தேவகி குப்புஸ்வாமி அவர்கள் கூறியதை போல திரு சுதர்சன் அவர்களின் ஜோக்குகளை எல்லாம் ஒரு சீ.டி வடிவத்தில் வெளியிட்டால் அது அவருககு செய்யும் மிகப் பெரும் மரியாதையாக இருக்கும்.
பதிலளிநீக்குஇன்னமும் கூட நம்முடைய தமிழ் பத்திரிக்கை உலகில் ஓவியர்களை வெறும் லே-அவுட் பணிக்கு மட்டும் உபயோகிக்கும் எண்ணம் மலிந்து காணப்படுகிறது. ஓவியர்களுக்கு என்று சிறப்பான மரியாதையும் வழங்கப் படுவது கிடையாது.
வணக்கம் திரு.அய்யம்பாளைம் வெங்கடேஸ்வரன் அவர்களே,
பதிலளிநீக்குமீண்டும் உங்களின் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி! ஆனால் இம்முறை ஒரு துக்க செய்தியை வெளியிட்டு அந்த மகிழ்வை மறக்கச் செய்து விட்டீர்கள்!
திரு.சுதர்ஸன் அவர்களின் சிறுவனும் நாய்க்குட்டியும் அடிக்கும் லூட்டிகளை சிறுவயதில் பூந்தளிரில் பார்த்து பார்த்து ரசித்துள்ளேன்! மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள்!
ஆனால் அவர்தான் அதன் படைப்பாளி என்பதையோ, அவர் யார், எப்படி இருப்பார் என்பதையோ நான் அறிந்திருக்கவில்லை! புகைப்படத்துடன் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள், நன்றி! ஆனால் இப்பதிவு ஒரு இரங்கல் செய்தியாகப் போனது துரதிர்ஷ்டமே!
இவரைப் போன்ற பல படைப்பாளிகளை தமிழக அரசோ, பதிப்பகங்களோ, வாசகர்களோ சரியான விதத்தில் கவுரவிக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்!
இனி வரும் சந்ததியினர் இவர் போன்றோரின் அருமை பெருமைகளை அறிய வழிவகைகளை எனக்கு தெரிந்த வரையில் பட்டியலிடுகிறேன்! அனைவரும் அவரவர் கருத்துக்களைக் கூறுமாறு வேண்டுகிறேன்!
1) மறுபதிப்பு முயற்சிகள்:
புதிய தலைமுறை வாசகர்களைச் சென்றடையச் சிறந்த வழி! பழைய வாசகர்களையும் வாங்கத் தூண்டிட வேண்டும்! பதிப்பகத்தார் இதற்கு முன்வர வேண்டும்! படைப்பாளிகளின் உழைப்பில் தான் பதிப்பகங்கள் பணம் பண்ணுகின்றன என்பதை நாமும் அவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்!
2) அரசாங்க விருதுகள்:
இறந்த பிறகு குடும்பத்திற்கு மாணியம் வழங்காமல் இருக்கும் போதே நாடறிய கவுரவப் படுத்துதல் வேண்டும்! டாக்டர் பட்டம், கலைமாமணி விருது போல் கேலிக் கூத்தாக்காமல் தகுதியுடையோருக்கு வழங்கி விருதுக்கும், விருது வாங்குவோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்!
3) வாசகர்களின் ஆதரவு:
அய்யம்பாளையத்தாரின் முயற்சி ஒரு சிறு துளியேயாகும்! இன்னும் இது போல் பலர் முன் வர வேண்டும்!
நண்பர்களே, நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறத் தயங்காதீர்கள்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
மீண்டும் நீங்கள் பதிவிட ஆரம்பித்து விட்டீர்கள் என்ற மகிழ்சியோடு வந்து பார்த்தால், இங்கு ஒரு துக்க செய்தி.
பதிலளிநீக்குஉண்மையில் நான் துணுக்குகளை எல்லாம் சக நண்பர்களைப் போல அந்த அளவிற்கு உற்றுப் பார்ப்பவன் அல்ல.அதனால் இவர் யார் என்றே உணர எனக்கு சற்று நேரம் ஆனது.
தலைவர் கூறிய அனைத்து கருத்துக்களையும் நான் வழி மொழிகிறேன்.
பதிப்பில் கூறப்பட்ட அந்த குறுந்தகடு வந்தால் அதனை வாங்குபவர்களில் முதலாவதாக நான் நிர்ப்பதோடில்லாமல் என்னுடைய நண்பர்களையும் வாங்க தூண்டுவேன் என்று சுதர்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு உறுதி அளிக்கிறேன்.
புலா சுலாகி,
உண்மையில் இது கவலைப்படும் நேரம்,என்னதான் குறுகிய வாழ்வாக இருந்தாலும்.
அ.கொ.தீ.க தலைவர் அவர்கள் கூறியதை கவனித்தால் இந்த ஓவியர்களின் வாழ்நாளில் அவர்களை யாரும் கவுரவித்தது இல்லை என்றே தோன்றுகிறது. அதனை நம்முடைய தமிழ் காமிக்ஸ் வலைப் பதிவர்கள் என் செய்யக் கூடாது?
பதிலளிநீக்குஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் பத்து ஆங்கில காமிக்ஸ் வாங்கும் தொகையை சேமித்து அதனை கொண்டு நம்முடைய காமிக்ஸ் வலைப் பதிவர்கள் அனைவரும் இனைந்து தற்போது இருக்கும் காமிக்ஸ் ஓவியர்களுக்கு ஒரு விழ நடத்தி அதன் மூலம் ஒரு தொகையை நன்கொடையாக அளிக்கலாமே? அல்லது ஒரு விருதினையோ சிறப்பு பரிசினையோ அளிக்கலாமே?
நன்கொடை சிறிதெனினும், அந்த விழாவின் நாயகன் ஆக இருக்கும் அந்த ஓவியர்கள் (செல்லம், கோபன், ரமணி, வினு - எங்கு இருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ?) அதனை வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டர்கள். என்ன கூறுகிறீர்கள் தோழர்களே?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
மிகவும் வருத்தம் அளிக்கும் விடையம்.
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி.
தோழர்,
பதிலளிநீக்குபதிவுக்கும், தகவலுக்கும் நன்றி. தொங்கும் இதயத்துடன்,
காமிக்ஸ் பிரியன்.
தோழர்,
பதிலளிநீக்குஇவரைப் போலவே மற்றுமொரு துணுக்கு ஓவியர் (பவித்ரா / விசு = சரியாக நினைவில்லை) பூந்தளிர் இதழில் வரைவார். ஆனால் இவரைப் போல சிம்பிள் ஆக வரையும் ஓவியர்கள் மிகவும் குறைவு.
இவருடைய ஒவியங்களை மறுபடியும் ஒரு முறை பாருங்கள். இது போன்ற துணுக்குகளுக்கு என்ன தேவையோ அதனை மட்டும் வரைந்து இருப்பார். இவர் ஓவியங்களில் ரெடண்டன்சி இருக்கவே இருக்காது.
கல்கி குழுமத்தில் இவர் வரைந்தாரா? எனக்கு நினைவில்லை. (கோகுலம்)
தோழர் புலா சுலாகி சொன்ன ஐடியா நன்றாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. தோழர்கள் இதனை பற்றி தங்களின் கருத்துக்களை பதியலாமே?
பதிலளிநீக்குநண்பர் அ.வெ அவர்களே,
பதிலளிநீக்குஅமரர் திரு சுதர்ஸன் குறித்த உங்கள் பதிவின் மூலம், ஒர் கலைஞரைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அவரிற்குரிய அங்கீகாரம் கிடைத்ததோ இல்லையோ, உங்கள் போன்ற ரசிகர்களின் நினைவு கூறல்கள் மிகவும் உண்மையானது. நன்றி.
மறைந்த திரு.சுதர்ஸனின் கார்டூன் சித்திரங்களை பூந்தளிர், வாரமல் இதழ்களில் கண்டு ரசித்திருக்கிறேன். அப்போது அவர் கையெழுத்தை வைத்து அவரின் பெயரை சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை, இல்லை அந்த பருவத்தில் கதாகர்த்தாக்களை பற்றி ஆர்வமும் அதிகரிக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அக்குறையை போக்க அவரின் அறிமுகத்தை, அது இறங்கல் செய்தியே ஆயினும், குடுத்தமைக்கு நன்றி அய்யம் வெங்கி அவர்களே.
பதிலளிநீக்குஅவரின் பெயர் வேண்டுமானாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம், ஆனால் அவர் படைப்புகள் இன்றும் வெகுஜனத்தினரிடம் நீங்கா நினைவுகளை கொண்டிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
மறைந்த சுதர்ஸனின் குடும்பத்தினர்கு என்னுடைய ஆழ்ந்த இறங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இவரை பின்பற்றி தற்போதைய காமிக்ஸ் கலைஞர்களும் தங்கள் ஓவியங்களை தனி சிறப்போடு படைக்க ஆரம்பித்தாலே, இப்படிபட்ட கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமா அது அமையும்.
நம்மால் முடிந்த ஒரு விஷயம், தற்போது நம்மிடைய வாழ்ந்து கொண்டிரு்க்கும் காமிக்ஸ் கலைஞர்களின் முகவரி அல்லது தொலைபேசி கொண்ட பெயர் பட்டியல் யாரிடமாவது இருந்தால், இல்லை அதை உருவாக்க முடிந்தால், அதை சம்பந்தபட்டவர்களின் அனுமதியுடன் வெளியிட்டு மற்றவர்களுக்கும் அதை தெரியபடுத்தலாமே.
நண்பர்கள் அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் கலைச்சேவைக்கு பாராட்டியாவது தங்கள் ஆதரவை தெரிவிக்க இயலும்.
ÇómícólógÝ
திரு. சுதர்ஸன் அவர்கள் துணுக்குகள் குமுதம் இதழில் பெரிய அளவில் வந்தன. குமுதம் இதழ் அவற்றை தொகுத்து வெளியிடலாம். மதி சேகரன்...
பதிலளிநீக்கு