செவ்வாய், 14 ஏப்ரல், 2009

தமிழ் காமிக்ஸ் முன்னோடிகள் - ஆர்.வி!


நீண்ட...... நெடுங்காலத்திற்கு பின் மீண்டும் சந்திக்கிறேன். இனி இந்த தொய்வு இருக்காது. இடைப்பட்ட காலத்திற்குள் நண்பர்கள் எவ்வளோவோ சாதித்துள்ளார்கள். நான் சற்றே பின் தங்கி விட்டேன். இருப்பினும் உங்களை தொட்டு விட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பு நண்பர் விஸ்வா-விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Writer R.V
தமிழ் காமிக்ஸ் படைப்புகளில் பெரும்பான்மையான படைப்புகள் பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டவையே! நமது லயன் குடும்ப வெளியீட்டாளர்களின் பங்கு குன்றில் இட்ட விளக்கு போல யாவரும் அறிந்ததே. இவர்களுக்கும் முன்னால் ஒரு சில படைப்பாளர்கள் தமிழ் கலாச்சார பின்னணி கொண்ட கதைகளை உள்ளூர் ஓவியர்களை கொண்டு காமிக்ஸ் வடிவில் படைத்துள்ளனர். அவர்களில் முதன்மையானவர் 'ஆர். வி.' என்று அழைக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன். ஆயிரம் பிறைகள் கண்ட ஆர். வி 20 நாவல்கள், 500 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படைத்துள்ளார். 1950-70 - களில் 'கண்ணன்' என்ற சிறுவர் இதழில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

Kannan 
குழந்தைகளுக்காக 25-க்கும் மேற்பட்ட நாவல்களையும் 15-க்கும் மேற்பட்ட காமிக்ஸ்-களையும் ஆர். வி. படைத்துள்ளார். சிறுவர் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆர். வி. கண்ணன் சிறுவர் இதழ் 1930-களில் தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய கலைமகள் குழுமத்தால் வெளியிடப்பட்டது. ஆர். வி. படைத்த 'இரு சகோதரர்கள்' என்ற சித்திரக்கதையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எண்பதுகளில் பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஒரு சில பக்கங்களில் வந்த கதைகள் போன்றதுதான் இந்த கதை.

சித்தியால் கொடுமைப் படுத்தப்பட்ட இரு இளவரசர்கள் அரண்மனையை விட்டு வெளியேறுகிறார்கள். போகும் வழியில் ஒரு பாறை மேல் இளைப்பாறும்போது ஒரு பூதம் தோன்றி மூத்தவன் (குமார்) மன்னன் ஆவான் என்றும் இளையவன் (சுகுமார்) மந்திரி ஆவான் என்றும் கூறி மறைகிறது. வழியில் தம்பியை பிரியும் குமார் யானையால் ஒரு நாட்டின் மன்னனாக தேர்ந்தெடுக்கப் படுகிறான். தொலைந்து போன தம்பியை தேட முனைந்து அதில் தோல்வி காண்கிறான். இதற்கிடையே பாம்பால் தீண்டப்பட்டு மரணம் அடையும் சுகுமார் ஒரு மந்திரவாதியால் காப்பற்றப்பட்டு ஒரு கிழவியை சந்திக்கிறான். அரக்கனை கொன்றால் நாட்டில் பாதியும், தனது மகளையும் தருவதாக அந்த நாட்டின் மன்னன் அறிவித்து இருந்தான். கிழவியும் அந்த அரக்கனால் கஷ்டபடுவதை அறிந்து அரக்கனை கொல்கிறான். ஆனால் ஒரு ஏமாற்று பேர்வழி சுகுமாரை ஏமாற்றி அரசை அடைகிறான். சுகுமாரை கொல்லவும் முனைகிறான். தப்பிய சுகுமார் கப்பலில் நாடுகளை சுற்றுகிறான். திறமையான சிற்பியாகவும் மாறுகிறான். ஒரு நாள் ஒரு நாட்டின் மந்திரி தனது மகளுடன் கப்பலுக்கு வர அவளிடம் காதல் வயப்படுகிறான் சுகுமார். மந்திரி சுகுமாரை கொல்ல முனைய அவன் மன்னனிடம் நீதி கேட்க போகிறான். அப்போது மன்னன் தனது அண்ணன்தான் என்பதை அறிகிறான். மந்திரி தனது மந்திரி பதவியையும் மகளையும் சுகுமாருக்கு அளிக்கிறான். முன்பு ஏமாற்றியவனை வென்று அவனது ராஜ்யத்தை அண்ணனின் ராஜ்யத்துடன் இணைக்கும் சுகுமார் மன்னனின் மகளை அண்ணனுக்கு மணம் முடிக்கிறான். பிறகு என்ன? சுபம்தான்!
ஸ்ரீ என்பவர் சிறப்பாக சித்திரங்களை தீட்டியுள்ளார். இருபது பக்கங்களில் கருப்பு வெள்ளையில் வானதி பதிப்பகத்தால் இந்த காமிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. 1973 -ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்த இந்த காமிக்ஸ் மிக நேர்த்தியாக பதிக்கபெற்றுள்ளது. சிறுவர் இலக்கியத்தில் வானதி நிறுவனம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
001 002
003  004
005
006
007
008
009
010
011
நன்றி: ஆர்.வி., வானதி பதிப்பகம், ஸ்ரீ, தினமணி-சிறுவர்மணி, கிங் விஸ்வா மற்றும் இணைய நண்பர்கள்


20 கருத்துகள்:

 1. வாருங்கள் அய்யம்பாளையம் நண்பரே,

  நாந்தான் முதலில் உங்கள் பதிவில் கமெண்ட் இடும் பேரைப் பெறுகிறேன்.

  நீங்கள் வந்தது பெரும் மகிழ்ச்சி.

  கேள்விப் படாதவர் R.V. அருமையான் தகவல்களை சேகரித்து வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு காமிக்ஸ் பல்கலைக்கழகம்.

  அந்தக் காலத்திலேயே இப்படி எல்லாம் புத்தகம் வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

  கதை சுமார் தான்

  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அய்யம்பாளைய கவர்னர் அவர்களே,

  உங்களை வருக வருக என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

  எங்கள் தானைத் தலைவர் மீண்டு(ம்) வந்து இருப்பது மிகுந்த, எல்லையற்ற மகிழ்வை அளிக்கிறது.

  தங்களின் வரவால் தமிழ் காமிக்ஸ் வலையுலகம் ஒரு தலைவரை மீண்டும் பெற்றுள்ளது. தொடருங்கள் உங்கள் அட்டகாசங்களை.

  உண்மையை சொல்வதென்றால் ஆர்வீயின் கதைகளை நான் ஒன்று கூட படித்தது கிடையாது (கையில் இருந்தும் கூட). அந்த இரு சகோதரர்கள் ஒரு நல்ல முயற்சி.

  வானதி பத்திப்பகம் இதைப் போன்றே வேறு சிறுவர் இலக்கியங்களை வெளியிட்டு உள்ளார்கள்.

  குறிப்பாக வாண்டு மாமாவின் புலி வளர்த்த பிள்ளை, மர்ம மனிதன் போன்ற கதைகளை இவர்களே பதிப்பித்தார்கள்.

  கிங் விஸ்வா.

  பதிலளிநீக்கு
 3. சார்,

  இவர் தானே நம்ம முன்னால் ஜனாதிபதி வெங்கட்ராமன்?

  நார்த் இந்தியன் டிரெஸ் எல்லாம் போட்டு இருக்கார். அப்ப கண்டிப்பா இவர் தான்.

  ஜுடோ ஜோஸ்.
  Judo Josh can kill two stones with one bird.

  பதிலளிநீக்கு
 4. நண்பர் அ.வெ. அவர்களே, முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமைகள் எல்லாம் இனி உங்களதே.

  உங்கள் வித்தியாசமான பதிவுகளை இனிப் படித்து மகிழலாம் என்பது ஒர் நல்ல நிகழ்வே.

  கண்ணன் மிகத் தரமான சிறுவர் இதழ். அதன் பல இதழ்களைப் படிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அண்மையில் இளம் காளை எனக்கு ஒர் இதழை அனுப்பி வைத்திருந்தார். அவர் நீடுழி வாழ்க.

  வானதிப் பதிப்பகம் பல சிறுவர்க்கான நூல்களை வெளியிட்டுள்ளது. முன்பு வாண்டு மாமாவின் நூல்கள் அதிகம் வானதி பதிப்பகத்திலேயே வெளியாகும்.

  ஆர்.வி போன்ற மனிதர்களை இன்று நினைவில் வைத்திருப்போர் எத்தனை பேர். வேகமாக ஓடும் உலகில் டாடி, மம்மியைக் கூட மறந்து விடுகிறார்கள்.

  ஜூடோ ஜோஸ், ஜானி நீரோ குத்துச் சண்டைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். அவரை மோதி வெல்லவும். என் கற்பைக் காப்பாற்றவும். ஒரு கல்லை இரண்டு மாங்காயால் உடைப்பேன் என்ற பன்ச் டயலாக்குக்கு குறைச்சலில்லை.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. நண்பர் அ.வெ. அவர்களே,
  இதே போல் அரசர் காலத்து சரித்திர கதை படித்து வெகு நாள் ஆகி விட்டது . சிறு வயதில் வானதி பதிப்பகம் வெளிஇட்ட வாண்டு மாமாவின் மர்ம மனிதன் , கடற் கொள்ளையர்கள் படித்துள்ளேன் . இன்னும் அந்த புத்தகம் என்னிடம் உள்ளது .

  Thanks & Regards,
  Lucky Limat

  பதிலளிநீக்கு
 6. வருக, வருக, அய்யம்பாளையத்தாரே! வந்து வலையுலகை மீண்டும் வண்ணமயமாக்குக!

  இந்தக் கதையில் எனக்கொரு சந்தேகம்!

  கதையின் ஆரம்பத்தில் அண்ணன் ராஜாவாகவும், தம்பி மந்திரியாகவும் இருப்பான் என பூதம் கூறும் போது அண்ணன் தான் அதிர்ஷ்டசாலி என எண்ணத் தோன்றுகிறது!

  ஆனால் கதையில் ஒரு சரியான திருப்பம் ஒன்றைக் கொடுத்துத் தம்பியை இரு பத்தினிவிரதனாக ஆக்கியிருக்கிறார். அதுவிமில்லாமல் அண்ணனுக்கு திருமணம் ஆனதாகக் குறிப்பிடவில்லை! அப்பிடியே ஆனாலும் கூட ராணியை வழக்கமாக மந்திரிகள் கரெக்ட் செய்து கொள்வது சகஜம்தானே!

  இப்போது கூறுங்கள், தம்பிதானே அதிர்ஷ்டசாலி! என்ன நான் சொல்றது?

  பி.கு.:-

  படங்களைப் பெரிதாக்கிப் படிக்க முடியவில்லை. கொஞ்சம் மறுபடியும் அப்லோடு செய்கிறீர்களா? ப்ளீஸ்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  பதிலளிநீக்கு
 7. அய்யம் வெங்கி அவர்களே, வருக வருக, உங்கள் வித்தியாசமான பதிவுகளை மிக நாளாக தொலைத்து விட்டு அலைந்த ரசிகர்களுக்கு இது ஒரு தேனான செய்தி என்பதில் ஐயமில்லை.

  ஆர்.வி. யின் கதைகளை நான் படித்து நியாபகம் இல்லை. ஒரு வேளை படித்தும் இருக்கலாம், ஆனால் அப்போது வாண்டுமாமா என்ற வார்த்தைகளை தவிர மற்ற எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களின் பெயர்கள் மனதில் நில்லாமல் போயிருக்கலாம்.

  நீங்கள் அளித்த ஆர்.வி.யின் சித்திரகதையை படித்தேன். கதைகரு குழந்தைதனமாக (அவர்களுக்காக தானே எழுதியது என்று வாதிடலாம்) இங்கும் அங்கும் திசையில்லாமல் அலைந்தாலும், அந்த காலத்து சித்திரங்களை ரசித்தேன். ஸ்ரீயின் ஓவியத் திறமையை என்னவென்று கூறுவது. பெரும்பாலும் அக்கால ஓவியர்கள் நபர்களை தீட்டுவதில் அதிக கவனம் காட்டி விட்டு, பின்புலத்தை வெறுமையாகவே, இல்லை கண்ணங்கரேலேன்று கருமையாகவோ இட்டு விடுவார்கள். அப்படியே வரைந்தாலும் அது ஏனோ தானே என்று தான் இருக்கும். ஆனால் இச்சித்திரங்கள் பின்புலங்களை எவ்வளவு சித்தையுடன் வரைந்து இருக்கிறார், மேகங்கள், கூடார அலங்காரங்கள், உதிக்கும் சூரியன் அனைத்தும் அருமையோ.. அருமையோ.... பூந்தளிர் சித்திரங்களில் கூட இத்தரத்தை பார்த்த நியாபகம் இல்லை, செல்லம்மின் ஓவியங்களை தவிர்த்து.

  பகிர்ந்தமைக்கு நன்றி, படங்களின் சுட்டிக்களை மீண்டும் சரி படுத்தி வெளியிட்டீர்கள் என்றால் எழுத்துகளையும், படங்களை இன்னும் சிறப்பாக ரசிக்க முடியும்.

  வானதி பதிப்பதினர் இப்போதெல்லாம் காமிக்ஸ் சித்திரங்களை ஏன் வெளியிடுவதில்லை. நல்ல தரமான (பொன்னி காமிக்ஸ் மாதிரி இல்லை) எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களை வைத்து அவர்கள் முயற்சி செய்யலாம் என்பது என் கருத்து. மிகப் பெரிய தமிழ் புத்தக வெளியீட்டாளராக தன்னை அடையாளம் காட்டி கொள்ளும் விகடன் குழுமத்தினர் கூட சித்திரக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அந்த கலைக்கே செய்யும் அவமரியாதை. வருங்காலத்தில் அந்த களங்கத்தை துடைப்பார்களா என்று பார்ப்போம்.

  13 நயாபைசா விலையில் அந்த 1959 ம் ஆண்டு கண்ணன் புத்தகத்தை இன்னும் சிறப்பாக பேணி காப்பாற்றி வருகிறீர்கள் போல.... இப்படி இன்னும் பொக்கிஷங்கள் எவ்வளவு உள்ளன தங்களிடம் என்று பட்டியல் கிடைக்குமா... கிடைத்தால் இதை முதலில் பதிவிடுங்கள் அதை பதிவிடுங்கள் என்று உங்களை தொல்லை பண்ண வாகாக இருக்கும்.

  தமிழ் காமிக்ஸ் பதிவர்களில், காமிக்ஸ் பல்கலைகழகம் என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே உரித்தது. தொடருங்கள் உங்கள் அதிர்வேட்டை.

  ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  பதிலளிநீக்கு
 8. வருக, வருக, அய்யம்பாளையத்தாரே!

  தெரியாத நபர்கள பற்றி மட்டுமில்லாமல் தெரிந்த கலைஞர்களின் தெரியாத விவரங்களை வழங்குவதில் உமக்கு நிகர் நீரே என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. //அதுவிமில்லாமல் அண்ணனுக்கு திருமணம் ஆனதாகக் குறிப்பிடவில்லை! அப்பிடியே ஆனாலும் கூட ராணியை வழக்கமாக மந்திரிகள் கரெக்ட் செய்து கொள்வது சகஜம்தானே!
  இப்போது கூறுங்கள், தம்பிதானே அதிர்ஷ்டசாலி! என்ன நான் சொல்றது?//

  எப்படின்னே, எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்க முடியுது?

  ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

  அந்த மந்திரியாகும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
 10. மந்திரி மங்குனி பாண்டியன்16 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:31

  ஐயா,

  //ராணியை வழக்கமாக மந்திரிகள் கரெக்ட் செய்து கொள்வது சகஜம்தானே!//

  தயவு செய்து எங்கள் மன்னருக்கு சீக்கிரம் திருமணம் செய்து வையுங்கள்.

  மந்திரி மங்குனி பாண்டியன்

  பதிலளிநீக்கு
 11. நண்பரே,

  இப்போது படங்கள் நன்றாக உள்ளன.

  இந்த ஓவியர் தான் ஆரம்ப காலத்தில் கன்னி தீவு வரைந்தவரா?

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

  பதிலளிநீக்கு
 12. ஏம்பா ஏதாவது மந்திரி போஸ்ட் காலியா இருந்தா சொல்லுங்கப்பா,நானும் பிழைச்சுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

  காமிக்ஸ் டாக்டரின் உதவியால் தற்போது படங்களை படிக்கும்படி பதிவிட்டுள்ளேன். கதையை முழுமையாக தற்போது ரசிக்க முடியும்.

  க.கொ.க.கூ: //கேள்விப் படாதவர் R.V. அருமையான் தகவல்களை சேகரித்து வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு காமிக்ஸ் பல்கலைக்கழகம்.//

  >> ஆர்.வி ஒரு சிறுவர் இலக்கியவாதி என்பது நான் முன்பே அறிந்தது. ஆனால் அவர் படைத்த காமிக்ஸை எனக்கு அளித்து உதவியது நண்பர் கிங் விஸ்வாதான். உங்கள் பல்கலைக்கழகப் பாராட்டுக்கு உரியவர் அவரே.

  கிங் விஸ்வா:

  //உண்மையை சொல்வதென்றால் ஆர்வீயின் கதைகளை நான் ஒன்று கூட படித்தது கிடையாது (கையில் இருந்தும் கூட).//

  >>'தேனீக்கு தேன் குடிக்க நேரமிருக்காது' என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் (?)

  சங்கர விஸ்வலிங்கம்:

  //கண்ணன் மிகத் தரமான சிறுவர் இதழ். அதன் பல இதழ்களைப் படிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அண்மையில் இளம் காளை எனக்கு ஒர் இதழை அனுப்பி வைத்திருந்தார். அவர் நீடுழி வாழ்க.//

  > அதே இளம் காளைதான் எனக்கும் கண்ணனை அறிமுகம் செய்தார் ஐயா!

  Lucky Limat:

  //இதே போல் அரசர் காலத்து சரித்திர கதை படித்து வெகு நாள் ஆகி விட்டது .//

  >> சிறுவயதில் மன்னர் காலத்து கதைகளை நாடகமாக வானொலியில் கேட்டதுண்டு. நன்றாக இருக்கும். காமிக்ஸ் வடிவில் மன்னர் கால கதைகளை படிப்பது ஓர் வித்தியாமான அனுபவம். உதாரணமாக வாண்டுமாமாவின் 'கனவா நிஜமா?' என்ற காமிக்ஸ் ஒவியர் செல்லத்தால் உருவாக்கப்பட்டதொரு அற்புதமான படைப்பு. அந்த கால கட்டமைப்புகள், உடையலங்காரங்கள், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஏராளமான காட்சியமைப்புகளை அந்த காமிக்ஸில் நாம் காணலாம்.

  பயங்கரவாதி டாக்டர் செவன்:

  //ஆனால் கதையில் ஒரு சரியான திருப்பம் ஒன்றைக் கொடுத்துத் தம்பியை இரு பத்தினிவிரதனாக ஆக்கியிருக்கிறார். அதுவிமில்லாமல் அண்ணனுக்கு திருமணம் ஆனதாகக் குறிப்பிடவில்லை! அப்பிடியே ஆனாலும் கூட ராணியை வழக்கமாக மந்திரிகள் கரெக்ட் செய்து கொள்வது சகஜம்தானே!//

  >> ஏதோ அவசரத்தில் படங்களை சரியாக அப் லோடு செய்யத் தவறிய என் செயலால் ஒரு நல்ல மந்திரியை தவறாக எடைபோட்டு விட்டீர்களே ஐயா! ஆமாம் அது என்ன புது கண்டுப் பிடிப்பு "இரு பத்தினி விரதன்." தயவு செய்து மீண்டும் ஒரு முறை கதையை படித்து தெளிவு பெற வேண்டுகிறேன். (அல்லது தெளிவாக இருக்கும்போது கதையை படிக்கவும்)

  காமிக்காலஜி:

  //13 நயாபைசா விலையில் அந்த 1959 ம் ஆண்டு கண்ணன் புத்தகத்தை இன்னும் சிறப்பாக பேணி காப்பாற்றி வருகிறீர்கள் போல.... இப்படி இன்னும் பொக்கிஷங்கள் எவ்வளவு உள்ளன தங்களிடம் என்று பட்டியல் கிடைக்குமா...//

  //தமிழ் காமிக்ஸ் பதிவர்களில், காமிக்ஸ் பல்கலைகழகம் என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே உரித்தது.//

  >> மேற்படி பாராட்டுரைகள் நண்பர் கிங் விஸ்வாவின் கனிவான பார்வைக்கு பரிந்து அனுப்பப்படுகிறது.

  ஸ்ரீயின் சித்திரத் திறமை நீங்கள் கூறுவது போலவே அற்புதமானதுதான். இவரை போன்ற தமிழ் காமிக்ஸ் ஓவியர்கள் பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க வேண்டும்.

  புலா சுலாகி:

  //இந்த ஓவியர் தான் ஆரம்ப காலத்தில் கன்னி தீவு வரைந்தவரா?//

  >> குட் கொஸ்டின்!

  பதிலளிநீக்கு
 14. From The Desk Of Rebel Ravi:

  Sir,

  i salute your dedication towards such an effort to bring out such people whom otherwise we would have never ever heard of.

  sorry for commenting in englidh.

  Jai Ho.
  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  பதிலளிநீக்கு
 15. சார்,

  அந்தக் கடிகாரத்தை எனக்காவது தருவீங்களா?

  பதிலளிநீக்கு
 16. அடுத்த பதிவு எப்போது நண்பரே?

  உங்களின் கற்கண்டு பதிவுகளுக்காக காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்

  பதிலளிநீக்கு
 17. நல்ல முயற்சி அய்யம்பாளையம்!

  தொடர்ந்து பதியுங்கள். வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  --
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  பதிலளிநீக்கு
 19. //அந்தக் காலத்திலேயே இப்படி எல்லாம் புத்தகம் வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.
  repeat! thanks for your efforts.

  பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!