ஞாயிறு, 16 நவம்பர், 2008

அம்புலிமாமாவின் முதல் இதழ்

'வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சு!', 'சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தன் போல..!', 'சரியான அம்புலிமாமா கதையாயிருக்கு!' போன்ற சொற்றொடர்கள் தமிழக வெகுஜனங்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. மேற்கண்ட சொற்றொடர்களின் பிரபலத்திற்கு காரணம் அம்புலிமாமா! கடந்த 61 வருடங்களாக தமிழக குழந்தைகளுக்கு தளராது சேவை செய்து வரும் சிறுவர் மாத இதழ்.

தமிழக குழந்தை இலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக அம்புலிமாமாவின் இந்த சாதனை முறியடிக்கப்படவேயில்லை. அதற்கான வாய்ப்புகளும் இனி இல்லை. ஏனெனில் அம்புலிமாமா தற்போது நவீனமயமாக்கபட்டுள்ளது. எழுத படிக்க தெரிந்த பெரும்பாலான தமிழர்களுக்கு அம்புலிமாமாவை படிக்கும் வாய்ப்பு ஒருமுறையேனும் கிட்டியிருக்கும்.

எங்கிருந்துதான் இவர்களுக்கு கதைகள் கிடைக்கின்றனவோ என்று வியக்கும் அளவுக்கு எண்ணிலடங்கா கதைகளை வெளியிட்டு கொண்டேயிருக்கிறார்கள்.
புராணம், பஞ்ச தந்திரம், நாட்டுப்புறக்கதைகள், அயல்நாட்டு கதைகள், பறவை, விலங்கு கதைகள், மாயாஜால கதைகள், இதிகாசங்கள் என அம்புலிமாமாவில் வெளிவராத கதைகளே இல்லை எனலாம்.

பெரும்பாலும் சிறுவர் பத்திரிகைகளில் ஒரு கதைக்கு ஒரு படம் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் அம்புலிமாமாவில் ஒரு பக்கத்திற்கு ஒரு படம் வீதம் அதுவும் வண்ணத்தில் வெளியிடுவார்கள். சித்திரங்களின் தரம் கண்ணில் ஒற்றிகொள்ளும் படி அற்புதமாக இருக்கும். எனது நினைவுகளின் படி சங்கர் என்பவரின் ஓவியங்கள் அம்புலிமாமாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருக்கின்றன.

1947 - ஜூலை மாதம் முதல் அம்புலிமாமா வெளிவந்தது. சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். புதிய இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள், கட்டமைப்புகள் செய்யப்பட வேண்டும் போன்ற விவாதங்கள் சூடுபிடித்த நேரம் அது. ஒரு நாட்டின் வருங்கால தூண்கள் தற்கால குழந்தைகள்தான். அவர்களுடைய குழந்தைப் பருவம் குதூகலமாக, வண்ணமயமாக, வளமான கற்பனைகளுடன், எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன், தேசப்பற்றுடன் அமைய வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமே நாகி ரெட்டி, சக்கரபாணி ஆகிய நற்சிந்தனையாளர்களால் அம்புலிமாமா தொடங்கப்பட்டது.

அச்சுத்துறையின் வளர்ச்சிக்கு முன்னர் நிலவொளியில் சிறுவர்களுக்கு கதை சொல்லும் புராதான வழக்கமே இருந்தது. எனவே கதை சொல்லுதலை நிலவுக்கு தொடர்புப் படுத்தி அம்புலிமாமா (நிலவு) என்று பெயரிடிருக்கலாம் என்பது எனது எண்ணம். முதல் இதழின் சில பகுதிகளை பார்ப்போம்.



அட்டை: 165 x 215 மில்லி மீட்டர் அளவு கொண்ட பல வண்ண அட்டை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், அந்த காலத்திலேயே அடிப்படை வண்ணங்களுடன் கூடுதலாக வெள்ளி (சில்வர்) வண்ணத்தில் அச்சிட்டு அட்டையை மெருகேற்றியுள்ளனர். இதனை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.

விலை: ஆறு அணா. மொத்தப்பக்கங்கள்: 68 (அட்டைகள் நீங்கலாக). துரதிஷ்ட வசமாக என்னிடம் கடைசி அட்டையும், நான்கு பக்கங்களும் இல்லை.

முதல் புன்னகை என்ற தலைப்பில் ஓர் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. அவசியம் படித்து பாருங்கள். அசந்து போவீர்கள்! (இறுதி பகுதி இல்லை, மன்னிக்கவும்)




இதழ் முழுவதும் தெளிவான படங்கள் அழகுற அச்சிடப்பட்டுள்ளன. இதழை முழுக்க படித்தால் வெளியீட்டாளர்களின் உழைப்பை புரிந்து கொள்ளலாம். தற்போது வெளிவரும் சில சிறுவர் இதழ்களின் தரத்தை, சித்திரங்களின் தெளிவை முதல் அம்புலிமாமவுடன் ஒப்பிடவே முடியாது. 61 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி அசத்தியிருக்கிறார்கள்!



அன்றைய சந்தா விவரங்கள். சுவராஸ்யமாக இருக்கிறது அல்லவா?



சென்ற ஆண்டு அம்புலிமாமாவின் வைர விழா. 61 ஆண்டுகள் ஆனாலும் வடிவமைப்பில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. உள்ளடக்கமும், இதழ் அளவும் சற்றே மாறியுள்ளது. வைர விழா சிறப்பிதழில் வெளியான ஆசிரியர் உரைகளை படியுங்கள். நிறையவே ஆர்வம் கொள்வீர்கள்; அம்புலிமாமாவை வாங்க ஓடுவீர்கள்!


சென்ற வார தினத்தந்தியின் 'சிறுவர் தங்க மலரில்' அம்புலிமாமாவின் 61 ஆண்டுகால சாதனையை குறிப்பிட்டுயிருந்தார்கள். (நன்றி: மன்னர் விஸ்வா) அதனையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


உங்களுடைய ஆர்வத்தை பொறுத்து அம்புலிமாமாவின் முதல் இதழின் பிறப்பகுதிகளை இனி வரும் இடுகைகளில் காணலாம்.

எனது முந்தய இடுகைக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி! உங்களது பின்னூட்டத்திற்கு எனது பதில்களை இங்கே காணுங்கள்.

காமிக்ஸ் டாக்டரின் புதிய இடுகை ரொம்பவும் அசத்துகிறது! அவசியம் நீங்களும் ஒரு நடை போய் பார்த்துட்டு வாங்க!

மன்னர் விஷ்வா ஜேம்ஸ் பாண்டுடன் மர்ம கோட்டைக்கு போய் வந்திருக்கிறார். அவருடைய அனுபவங்களை இங்கே காணலாம்.

மீண்டும் சந்திப்போம்...

24 கருத்துகள்:

  1. நண்பரே,

    உம்மை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதை விட உமது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை ஆகும்.

    இதழியல் படித்த நீங்கள் இன்னும் ஒரு இதழ் என் ஆரம்பிக்கவில்லை என்பதே என் மனதில் எழும் வினாவாகும். சிறப்பான கருத்துக்கள், சீரிய சிந்தனை, கூர்ந்த எண்ணம், கருத்துக்களை சிறப்பாக வெளிப்பட்டதும் பாங்கு என உங்களை கண்டு வியந்து கொண்டே போகின்றேன்.

    தொடர்ந்து இப்படியே எங்கும் காண இயலாத புத்தகங்களையும் செய்திகளையும் வெளிட்டு எம்மை அசத்துவீராக.

    அம்புலிமாமாவின் முதல் இதழை காண கண் கோடி வேண்டும்.

    சிறப்பாக வைத்து உள்ளீர்கள் உங்களிடம் உள்ள புத்தகங்களை

    பதிலளிநீக்கு
  2. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விகரமத்திதனை போல் ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் . உண்மையில் மிகவும் அற்புதமான பதிவு .மேலும் இது போல் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்கிறேன் . வாழ்த்துக்கள் .எனது சென்ற வேடிக்கை பதிவை
    நிஜமாக எடுத்துக்கொண்டு அந்த புத்தகங்களை ஸ்கேன் பண்ண ஆரம்பித்துவிட வேண்டாம்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பூ வாசகர்களுக்கு,

    காமிக்ஸ் தொடர்பான தகவல்களை, எண்ணங்களை நகைச்சுவை உணர்வுடன் பரிமாறிக்கொள்ளவே காமிக்ஸ் பூக்கள். பின்னூட்டமிடும் அன்பர்கள் பிறரை புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகிறேன்.

    எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் என்னை அறித்தவர்கள் சற்றே அதிகமாக என்னை கிண்டல் செய்தாலும் பிற காமிக்ஸ் நலன் விரும்பிகள் கோபப்பட வேண்டாம் என வேண்டுகிறேன். அனைவருடைய ஆர்வத்திற்கும் நன்றி.

    திரு. சர்வேசன் - மன்னிக்க வேண்டுகிறேன். இரவுக் கழுகு எனது நண்பர் - நம்மை போல தீவிரமான காமிக்ஸ் ரசிகர்.

    பதிலளிநீக்கு
  4. அன்பிற்குரிய திரு.அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    சுதந்திரத்துக்கு முன்னாடி வந்த அம்புலிமாமா எல்லாம் இன்னும் பத்திரமா வெச்சிருக்கீங்கன்னா...??? அப்போ நீங்க ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியா?!! என்ன கொடுமை சார் இது? சரி, காமெடி பண்ணது போதும். நம்ம செட்டுலேயே (என்ன பெரிய ஷேவிங் செட்டு?) மோஸ்ட்டு எலிஜிபில் பாச்சலர்னா அது நீங்கதான்கறது ஊரறிஞ்ச ரகசியம்!

    சுதந்திரத்திற்கு முன்னுள்ள விஷயங்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில் வைக்கிறார்கள். அவற்றில் இதை ஏன் சேர்க்கவில்லை என நேரு மாமாவைதான் கேட்கவேண்டும்!

    அப்புறம், அற்புதமான பதிவு போட்டதுக்கு பாராட்டுக்கள். கலக்கலாகத் தொடருங்கள்.

    இந்தப் பதிவை முடிந்தளவுக்கு விளம்பரப்படுத்த வேண்டும். முடிந்தளவு அதிகமான வாசகர்களை சென்றடைய வேண்டும். தமிழ்மணம், தமிலிழி, தமிலிஷ், திரட்டி போன்ற வலைத்திரட்டிகளிலெல்லாம் உங்கள் பதிவை சேர்த்து விடுங்கள். அடுத்த வாரத்துக்குள் பாருங்கள், உங்கள் வலைப்பூவின் வளர்ச்சியை!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் அ.வெ அவர்கட்கு,

    உங்கள் வலைப்பூவின் வண்ணப்பொருத்தம் பிரமாதம் கண்களை உறுத்தாது இதமாக தடவிவிட்டாற்போல் ஒர் உணர்வு.

    அம்புலிமாமாவின் முதல் இதழை நான் பார்க்கும் வாய்ப்பை அளித்ததிற்கு கோடி நன்றிகள். ஸ்கேன்கள் துல்யமான தெளிவைக்கொண்டுள்ளதால் இதழை நேரில் பார்க்கும் உணர்வு. தயைகூர்ந்து நரி மச்சான் கதையின் கடைசிப்பக்கத்தை வெளியிடுவதுடன் மற்றைய பக்கங்களையும் கண்களிற்கு விருந்தாக அளியுங்கள்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான ஒரு பதிவு. சின்ன வயதில் நான் விரும்பி படித்த சிறுவர் இலக்கியங்களில் முக்கியமானவை, சிறுவர் மலர் மற்றும் அம்புலிமாமா தான். பின்னாளில் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் வந்த விக்ரம் வேதாள கதை தொடரை நான் அந்த கட்டத்தில் அம்புலிமாமாவில் வந்த தொடர்கதை கொண்டு தான் புரிந்து கொண்டேன்.

    60 வருடங்களுக்கு முந்தைய அம்புலிமாமாவின் முதலாம் இதழை காண கண் கோடி வேண்டும். ஒவ்வரு பக்கங்களிலும் அதன் பின்னணியில் உழைத்த அம்புலிமாமா குழுவினரை பாராட்ட வேண்டும்.

    இதை படிக்க வழி ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி. மற்ற பகுதிகளையும் வரும் பதிவுகளில் தொடர்ந்து வெளியிடுங்கள்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

    பதிலளிநீக்கு
  7. Hiya,

    great post. where were you for so long and what you were doing instead of your great work towards our passion: comics.

    in fact, to see a book of 1947, that too pre-independence, was really amazing. hats off to you to maintain the book for so long. however, i do have a doubt.

    is somebody from your generation bought that book and they preserved it or you happen to buy it from somebody? which one is correct?

    by the way, kindly remove the word verification.

    பதிலளிநீக்கு
  8. தமிழ் காமிக்ஸ் பிதாமகர், திரு. ச. விஜயன், முதல் முறையாக வலை உலகத்தில், அவர் கருத்தை பதிந்து உள்ளார்... அதை படிக்க இங்கே சுட்டவும் http://comicology.blogspot.com/2008/11/lion-comics-205-tex-willer-nov.html

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    பதிலளிநீக்கு
  9. அய்யம்பாளயதாரே,

    வணக்கம். தாமதமாக பின்னுட்டம் இடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    காமிக்ஸ் என்றாலே சிறுபிள்ளை விளையாட்டு என்று நினைக்கும் இந்த தமிழ் கூறும் நல்லுலகில் அந்த தவறான போக்கை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு சிறு பிரிவினரின் தலைவர் நீங்கள். உங்களுக்கு சிதிரக்கதை உலகின் சார்பாக நன்றி கூறுகிறேன்.

    பிரம்மாதம். இது போன்ற பயனுள்ள இடுகைகளை தான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

    தொடருங்கள் உங்கள் பணியை. வாழ்த்துக்கள்.

    செயல் வீரர் செழியன்.

    பதிலளிநீக்கு
  10. அன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com

    வருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. காமிக்ஸ் உலக நண்பர்களே,

    தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

    சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

    அன்புடன்,

    உலக காமிக்ஸ் ரசிகன்.

    Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

    பதிலளிநீக்கு
  12. Hi boss, you've done an amazing job. I was damn happy to see the fan site for my most favorite comics.

    However, i've set a facebook club for Lion/Muthu and all other comics.

    Please visit the group and invite your friends.

    http://www.facebook.com/group.php?gid=37137139775

    Adios Amigo.

    பதிலளிநீக்கு
  13. From The Desk Of Rebel Ravi:

    Comics Pookal,

    Very nice to see the first issue of a Tamil comics (Sort off). Great to know that you still preserve that issue. Hats off to you.

    By the way, have you noticed that the downloads of the previous issues of chandamaama are no longer available in their site.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    பதிலளிநீக்கு
  14. Hi,

    nice concept that you have working on. i very much expect you to unearth "Vandumama" works over here.

    many of his works were not known to the present generation. eventhough the parvathi comics tried out something new, they couldn't sustain it over a period of it.

    Cheers.

    Udhayam Sami.

    பதிலளிநீக்கு
  15. hi there,

    nice update. been so long that i was out of blogosphere. many many new comers.

    all the best.

    பதிலளிநீக்கு
  16. > கிங் விஸ்வா:

    //இதழியல் படித்த நீங்கள் இன்னும் ஒரு இதழ் என் ஆரம்பிக்கவில்லை என்பதே என் மனதில் எழும் வினாவாகும்.//

    விஸ்வா! எனக்கு ஆம்ப்லட் போடத்தான் தெரியும். முட்டை போட கொஞ்சம் திறமை வேண்டும். (இருந்தாலும் தமிழ் மக்களின் மேல் உங்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது!)

    > இரவு கழுகு

    வாழ்த்துகளுக்கு நன்றி! தொடர்ந்து வாசியுங்கள்!

    > பயங்கரவாதி டாக்டர் செவன்

    'மாமா' குழந்தைகளின் நலன் விரும்பி என்பதெல்லாம் சும்மா அரசியல்! 'நேரு பாலா புத்தகாலய' என்பது மட்டுமே ஆக்க பூர்வமான முயற்சி. சிறுவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தை, காவியங்களை கொண்டு சேர்க்க எந்த முன்முயற்சியும் இல்லை. மதத்தின் போர்வையில் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன.


    >சங்கர விஸ்வலிங்கம்

    நன்றி அய்யா! உங்களின் ஆசீர்வாதம். நரி கதையை படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    > ரபிக் ராஜா

    //மற்ற பகுதிகளையும் வரும் பதிவுகளில் தொடர்ந்து வெளியிடுங்கள்.//

    அவசியம். இன்னுமொரு பதிவு அம்புலிமாமா குறித்து உண்டு!

    > பிளாக்கர்

    //i do have a doubt. is somebody from your generation bought that book and they preserved it or you happen to buy it from somebody? which one is correct?//

    பழைய புத்தகக்கடையில் 'குப்பையில் ஒரு மாணிக்கம் போல' அந்த இதழ் கிடைத்தது நண்பரே!

    > செழி

    //தாமதமாக பின்னுட்டம் இடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்//

    அப்ப நீங்க நம்ம ஆளு! நமக்குள்ள எதுக்கு மன்னிப்பெல்லாம்?


    > இவாஞ்சலிஷ்ட் (சரிதானா?)

    அவசியம் வந்து கலந்துகிறோம்.

    > ரிபெல் ரவி

    //By the way, have you noticed that the downloads of the previous issues of chandamaama are no longer available in their சைட்//

    கிங் விஸ்வா உங்கள் கேள்விகளுக்கு பதில் வைத்திருப்பார் எனது நம்புகிறேன்.

    > உதயம் சாமி

    //i very much expect you to unearth "Vandumama" works over தேரே//

    நேர நெருக்கடி. முயற்சி செய்வோம்..!

    வருகைப் புரிந்த அனைவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நண்பர் வெங்கி அவர்களே, வேலை பளு மற்றும் இணைய கோளாறு காரணமாக நீங்கள் பதியாது இருப்பது தெரியும். ஆனால், தமிழ் காமிக்ஸ் இலக்கியங்களை உங்களை விட சிறப்பாக ஒருவரால் பதிய முடியாது. சீக்கிரம், மீண்டும் உங்கள் பதிவுகளை தொடருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    மற்ற படி இந்த அம்புலிமாமா பதிவில் இருந்து இரண்டு படங்களை எனது சந்தாமாமா பதிவுக்கு உபயோக படுத்தி உள்ளேன், உங்கள் வலைப்பூவின் சுட்டியுடன். நேரம் கிடைக்கும் போது அங்கு வந்து உங்கள் கருத்துகளை கட்டாயம் பதிய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    http://www.comicology.in/2008/09/chandamama-collectors-edition-2008.html

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராகா

    பதிலளிநீக்கு
  18. hi venki sir its really nice to see old ambulimama i was a fan of it when i was a kid i wish i could buy them now too but my dad would not allow i'll start buying again when i earn these pages take my memories too my kindergarden when i used to read all these books at my grandpa's

    பதிலளிநீக்கு
  19. காமிக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறீர்கள். என்ன ஒரு விடாமுயற்சியும் ஆவலும் இருந்தால் இத்தகைய முத்து முத்தான பதிவுகள உருவாகும்!
    உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. காமிக்குகளின் மீது இவ்வளவு காதலா..........


    வாழ்க உங்கள் காதல்

    பதிலளிநீக்கு
  21. மிக அருமையான் பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் திரு. வெங்கடேஸ்வரன்,

    தங்கள் பணி மகத்தானது. அம்புலிமாமா இணையதளம் தற்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்டு, புத்தம் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முகவரி: www.ambulimama.com
    1947ம் ஆண்டு முதல் இன்று வரை அனைத்து இதழ்களையும் சேர்த்துள்ளோம். இதழ் தொடங்கியதில் இருந்து வெளியான அத்தனை விளம்பரங்களும் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    அம்புலிமாமாவின் அதிகாரப்பூர்வ வலைப்பூ: www.ambulimamatamil.blogspot.com உங்கள் கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  24. For ambulimama collection or other any tamil comics like rani lion muthu indrajaal other contact me whatsapp 7870475981

    பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!