அந்த நேரத்தில் தான் எங்கள் அப்பாயிகளும், அம்மாயிகளும் (பாட்டிகள்) எங்களுடைய தர்பாருக்கு வருவார்கள். பாவப்பட்ட நல்ல தங்காள் கதையிலிருந்து பழிவாங்கும் நல்ல பாம்பு கதை வரை சொல்லி கொண்டே இருப்பார்கள். மந்திரவாதி கதைகளும், கொல்லி வாய் பிசாசு கதைகளும் எங்களை ரொம்பவே மிரட்டியதுண்டு. சில கதைகள் ஒரே நாளில் முடியாமல் தொடர் கதைகள் ஆனதும் உண்டு.
பள்ளிக்கூடம் சென்று படிக்க கற்று கொண்டதும் கண்ணில் படும் காகிதங்களை எல்லாம் படிக்கும் ஓர் ஆர்வம் தோன்றியது. அப்படி படித்த ஒரு கதைதான் 'கபீஷ்' . கபீஷ் கதையில் இரண்டு பக்கங்கள் மட்டுமே எனக்கு கிடைத்தன. கதையின் முடிவு தெரியாமல் காகிதம் 'பொறுக்கும்' (டாக்டர் சதீஷ்! சந்தோசமா?) வேலையை என் கடமையாகவே கொண்டேன். இரண்டு வருடங்கள் கழித்து 1986-ல் அப்பா ஒரு பூந்தளிர் வாங்கி கொடுத்து எனது தீரா தாகத்தை தீர்த்து வைத்தார்.
பூந்தளிர் வாங்கியதும் நான் முதலில் படித்தது கபீஷ் தான். பூந்தளிரில் வாண்டுமாமா தன்னுடைய எல்லாவிதமான ஆற்றல்களையும் காட்டியிருப்பார். முதலில் அறிமுகமானதாலோ என்னவோ பூந்தளிரும் வாண்டுமாமாவும் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர். அதனால்தான் அவரை பற்றிய தகவல்களுக்கு முதலிடம் தருகிறேன்.
சுய புராணத்தில் நிறையவே மிச்சம் இருக்கிறது! நேரம் கிடைக்கும்போது (உங்களுக்குத்தான்..!) பேசலாம்...
திரு அய்யம்பாளையம் லக்ஷ்மணன் வெங்கடேஷ்வரன் அவர்களே,
பதிலளிநீக்குஉங்களை இணைய தள உலகிற்கு வருக, வருக என வரவேற்கிறேன்.
//எனது குழந்தை பருவத்தில்//
சுதந்திரத்திற்கு முன்பாகவா?
//சில கதைகள் ஒரே நாளில் முடியாமல் தொடர் கதைகள் ஆனதும் உண்டு//
அப்படியா? இது என்னுடைய தாத்தாவை நினைவு பதுதுகிறது. அவரும் இப்படி தான் ஒரு கதையை மெகா சீரியல் போல இல்லாமல் மிகவும் interestingஆக இரண்டு மூன்று நாட்கள் கூறுவார்.
//கதையின் முடிவு தெரியாமல் காகிதம் 'பொறுக்கும்' (டாக்டர் சதீஷ்! சந்தோசமா?) வேலையை என் கடமையாகவே கொண்டேன்//
எனக்கு புரியவில்லை. என் டாக்டர் சதீஷ் சந்தோஷப்பட வேண்டும்? விளக்குங்கள் அய்யா.
//பூந்தளிர் வாங்கியதும் நான் முதலில் படித்தது கபீஷ் தான்//
முதலில் நானும் அப்படி தான் இருந்தேன்.
//முதலில் அறிமுகமானதாலோ என்னவோ பூந்தளிரும் வாண்டுமாமாவும் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்//
உங்களை போல அனைவருக்கும் தோன்றும்.
இப்போது இணைய தளத்தில் அமர் சித்திர கதைகள், அம்புலிமாமா போன்றவை ஆங்கிலத்தில் அப்டேட் ஆகி உள்ளன.
ஆனால் நம்முடைய தமிழ் சிறுவர் இலக்கியங்களான பூந்தளிர், அம்புலிமாமா, ரத்னபாலா போன்றவை என்ன என்பதே அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமல் போகும் ஒரு சுழ்நிலை உள்ளது.
இதை சரி செய்யும் மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. எனவே இந்த பொறுப்பை தட்டி கழிக்காதிர்.
திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஇணைய குழவின் புது அங்கத்தினரை, வருக வருகவென வருவேற்கிர்றேன்.
தமிழ் மனம் மாறாத பதிப்பு. எளிமயான எழுத்துகளில் பள்ளி தருணத்தை நினைக்க வைத்ததற்கு நன்றி.
முத்து காமிக்சும், ராணி காமிக்சும், அறிமுகம் ஆகும் முன்பே பூந்தளிர், ரத்னபாலா போன்ற புத்தகங்கள் மூல சிதிரதகதைக்கு அறிமுகம் ஆனவர்களில் நானும் ஒருவன். கபிஷ், காக்கா காலி, போன்றவை இன்றும் மறக்க முடியாத ஒன்று.
By the way, கபிஷ் கதைகள், மேலை நாடுகளில் புகழ் பெற்ற Marsupilomi என்ற காமிக்ஸ் கதாபத்திரத்தை அடிபடையாக கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் அறிய எனது Spirou பற்றிய வலைபூவினை இங்கு சுட்டி காணவும் http://comicology.blogspot.com/2007/12/euro-books-spirou-and-fantasio-2007.html.
இன்றும் பல ரத்னபாலா, பூந்தளிர் புத்தகங்கள் கை வாசம் எனது சேகரிப்பில் இருப்பது ஒரு தனி மகிழ்ச்சி தான். அவை பற்றிய உங்கள் எழுத்துக்களை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
தொடரட்டும் உங்கள் எழுத்துலக பனி.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"
ரத்னா பாலாவில் முழு வண்ணத்தில் விண்வெளி அண்ணல் என்ற ஒரு சிறப்பான சித்திரக் கதை வருமே? அதனை யாரால் மறக்க இயலும்?
பதிலளிநீக்குதங்களிடம் அது இருந்தால் தயவு செய்து அதனை பற்றிய செய்திகளை வெளி இடவும்.
காலபோக்கில் அனைத்து புத்தகங்களையும் தொலைததோடில்லாமல், எனது சிறு பிராயத்து நினைவுகளையும் தொலைத்து விட்ட பாவி நான்.
அம்மா ஆசை இரவுகள் விசிறி.
From The Desk Of Rebel Ravi:
பதிலளிநீக்குayyaampalayam venkateshwaran,
very good intro about you. can you do a series on poonthalir characters like Kaalia the crow, tantri the mantri, suppandi, shikari sambu, kapish etc
thanks for reminding the same.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
வலையுலகிற்கு வருகை தந்திருக்கும் திரு அய்யம்பாளையம் லக்ஷ்மணன் வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு புதியவனின் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்கள்.
பதிலளிநீக்குஹாய் வெங்கி,
பதிலளிநீக்குஎனக்கும் கபீஷ் ரொம்ப பிடிக்கும். உங்க ப்ளாக்குக்கு intro குடுத்தது உங்க ஃப்ரண்ட் கிங் விஸ்வா.
உங்க கிட்ட பழைய பூந்தளிர், அம்புலி மாமா இருக்கா? கபீஷ் கதைய ஸ்கேன் பண்ணி போட முடியுமா, காபிரைட் பிரச்சனை இல்லன்னா, அதாவது லீகலா பண்ண முடியும்னா?
நிறைய எழுதுங்க, வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துர்றீங்களா ப்ளீஸ்
ரத்னபாலா படித்திருக்கிறீர்களா. 80களில் வந்து பின் நின்று போனது.
பதிலளிநீக்குபூந்தளிர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச புத்தகம்.. சாப்பிட கூட போகாம படிப்பேன்.. ஹ்ம்ம்.. அது ஒரு கனா காலம்.
பதிலளிநீக்குVenkatesh from Nanjayam Palayam
ரத்னபாலா பழசு கிடைக்குங்களா?
பதிலளிநீக்குvckarthik73@gmail.com